1. Home
  2. தமிழ்நாடு

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு! எப்படி தேர்வு முடிவுகளைப் பார்ப்பது?

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு! எப்படி தேர்வு முடிவுகளைப் பார்ப்பது?


மருத்துவ படிப்பிற்கான நீட்தேர்வு முடிவுகள் இன்னும் சில மணித்துளிகளில் வெளியாக உள்ளது. இதனை தேசிய தேர்வு முகமையின் இணையதளமான http://ntaneet.nic.in/-ல் மாணவ, மாணவிகள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

கொரோனா என்னும் பெருந்தொற்று பரவல் இருப்பினும், மத்திய அரசின் வழிகாட்டுதல்படியும் கட்டுப்பாடுகளுடனும் கடந்த 13-ம் தேதி நாடு முழுவதும் 3 ஆயிரத்து 862 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் நீட் தேர்வை ஆர்வமுடன் எழுதினர். ஆனால், கொரோனா பரவலுக்கு பயந்து சிலர் தேர்வு எழுதமுடியாமல் தவித்தனர்.

இதனால், தேர்வு எழுத முடியாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, கடந்த 14-ம் தேதி நீட் தேர்வு நடத்த உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கியது. அவ்வாறு நடத்தப்பட்ட தேர்வுகள் முடிவுகளை அக்டோபர் மாதம் 16-ம் தேதி அன்று வெளியிட வேண்டும் எனறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, இரண்டு கட்டமாக நடைபெற்ற இந்த நீட் தேர்வு முடிவுகள் இன்று இன்னும் சில மணித்துளிகளில் வெளியாக உள்ளது. இதனை, தேசிய தேர்வு முகமையின் இணைய தளமான https://www.nta.ac.in/ மற்றும் http://ntaneet.nic.in/ ஆகிய இணையதளங்களில் மாணவ, மாணவிகள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அதில், தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி போன்ற தகவல்களை பதிவு செய்து தேர்வு முடிவுகளை உடனே தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like