1. Home
  2. தமிழ்நாடு

பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!


பள்ளிகள் திறப்பின்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பள்ளி, பயிற்சி நிறுவனங்களை பகுதி வாரியாக திறப்பது குறித்து அக்டோபர் 15-ஆம் தேதிக்கு மேல் மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, பள்ளிகள் அவசர சிகிச்சை, பொது ஆதரவு, சுகாதார ஆய்வுக் குழு போன்ற பணிக்குழுக்களை உருவாக்க வேண்டும்.

வகுப்புகளின்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்.

முழுநேர பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர், செவிலியர், மருத்துவர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் இருந்து அவர்களது உடல்நலன் குறித்து தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.

வருகை விதிமுறைகளில் நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும்.

மதிய உணவு வழங்கும் நடவடிக்கைகளில் முன்னெச்சரிக்கை தேவை.

பெற்றோர்களின் ஒப்புதலை பெற்று அவர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமான அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்களை பள்ளிகளுக்குள் அனுமதிக்க வேண்டும்.

பள்ளிகளை அக்டோபர் 15ஆம் தேதி திறக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. ஆன்லைன் வகுப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

newstm.in

Trending News

Latest News

You May Like