இனி சார்பதிவாளர் அலுவலகங்களில் உறவினர்களுக்கு தடை - ஊழியர்கள் அதிர்ச்சி..!
தமிழகத்திலிருந்து சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரம் பதியும் போது ஏற்படும் சிக்கல் மற்றும் காலதாமதம் ஆகியவற்றை தவிர்க்க தற்போது அனைத்து வேலைகளும் ஆன்லைன் வாயிலாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அலுவலகங்களில் ரொக்க பண பரிமாற்றம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வெளி ஆட்களின் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டு மாவட்ட பதிவாளர்களால் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அப்போது சார் பதிவாளரின் உறவினர்கள் நண்பர்கள் என்ற அடிப்படையில் பலர் அலுவலக நுழைவது தெரிய வந்தது. இது குறித்து பேசிய பதிவுத்துறை தலைவர் சார்பதிவாளர் அலுவலகங்களில் துறைக்கு தொடர்பில்லாத நபர்கள் யாரும் பணியில் ஈடுபடுத்த கூடாது என உத்தரவிட்டார். மேலும் சார்பதிவாளர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் நண்பர்கள் என யாரையும் தன்னிச்சையாக பணியின்போது அனுமதிக்க கூடாது எனவும் அறிவுறுத்தினார். அத்துடன் அலுவலகங்களுக்கு அவ்வப்போது பதிவாளர்கள் ஆய்வு மேற்கொண்டு இதனை கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.