1. Home
  2. தமிழ்நாடு

டெல்லியின் நான்காவது பெண் முதல்வராகும் ரேகா குப்தா...கவுன்சிலர் டூ முதல்வர்..!

1

ரேகா குப்தா டெல்லியின் நான்காவது பெண் முதல்வராக பொறுப்பேற்கிறார். டெல்லி மக்களுக்கு மாற்றத்தை வழங்கக்கூடிய ஒரு திறமையான தலைவராக ரேகா குப்தா தன்னை நிரூபிப்பார் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரேகா குப்தா முதல்வராக அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடமே, டெல்லியில் அரசியல் காட்சிகள் சட்டென வேகமாக மாறி வருகின்றன. ரேகா குப்தா டெல்லியின் நிதி நிர்வாகம் மறறும் உள்கட்டமைப்பு, கல்வி சீர்திருத்த மற்றும் சுகாதார சேவைகள் உள்பட பல்வேறு விஷயங்களை எப்படி கையாள போகிறார் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சாதாரண கவுன்சிலராக இருந்தவர் டெல்லி முதல்வராக மாறியிருப்பதை அம்மாநில மக்கள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.

முன்னதாக புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா தான் முதல்வர் ஆக வாய்ப்புஇருப்பதாக கருதப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக ரேகா குப்தா முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


ரேகா குப்தாவின் சொத்து மதிப்பு அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பிரமாண பத்திரத்தில், ரேகா குப்தா தனது சொத்தின் நிகர மதிப்பு சுமார் ₹5.31 கோடி (தோராயமாக $640,000) என கூறியுள்ளார். மேலும் அவர் சொத்து மதிப்புடன் கடன் பற்றியும் பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார். ரேகா குப்தாவிற்கு கடன்கள் சுமார் ₹1.20 கோடி (சுமார் $145,000) என்று கூறியுள்ளார்.

யார் இந்த ரேகா குப்தா? - டெல்லியின் அடுத்த முதல்வராக டெல்லி பாஜக-வின் பல்வேறு முக்கிய தலைவர்களின் பெயர்கள் சொல்லப்பட்டன. இந்த நிலையில் ரேகா குப்தா முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். 50 வயதான ரேகா குப்தா, அண்மையில் நடைபெற்ற டெல்லி தேர்தலில் ஷாலிமார் பாக் சட்டமன்ற தொகுதியில் 29,595 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மூன்று முறை கவுன்சிலராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தெற்கு டெல்லி நகராட்சியின் மேயராகவும் பணியாற்றி உள்ளார். மாணவ பருவத்தில் அரசியலுக்குள் என்ட்ரி கொடுத்தவர்.

ரேகா குப்தா, 1996-1997 ஆம் ஆண்டில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 2007 ஆம் ஆண்டில் டெல்லி மாநகராட்சியில் உள்ள உத்தரி பிடம்புரா (வார்டு 54) இல் இருந்து கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 2012 ஆம் ஆண்டில் உத்தரி பிடம்புராவில் (வார்டு 54) இருந்து கவுன்சிலர் ஆனார். கவுன்சிலராக இருந்தவர், டெல்லியின் ஷாலிமார் பாக் தொகுதியில் முதல்முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இன்று முதல்முறையாக எம்எல்ஏவாக இருந்த போதும் டெல்லி முதல்வராகி உள்ளார்.
 

Trending News

Latest News

You May Like