முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக மறுவாழ்வு மையம்..!!

முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக மறுவாழ்வு மையம்..!!

முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக மறுவாழ்வு மையம்..!!
X

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பான முறையில் சேவையாற்றியவர்களுக்கான மாநில விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் போது பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கினார். மேலும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு மறுவாழ்வு இல்லத்திற்கான புதிய கட்டிடத்தையும் காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

Next Story
Share it