1. Home
  2. தமிழ்நாடு

பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு தொடக்கம்!

1

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் இணையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதேபோல் மருத்துவம் சார்ந்த துறைகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலைப் பட்டபடிப்பான பிஎஸ்சி நா்சிங், பி.ஃபார்ம், பிஎஸ்சி ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, ரேடியோதெரபி, இருதயவியல் உள்ளிட்ட மருத்துவம் சாா்ந்த 19 வகையான பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தமிழகத்தில் 2024 - 25-ம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம் உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளில் சேருவதற்கு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.ஜூன் 21ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Trending News

Latest News

You May Like