1. Home
  2. தமிழ்நாடு

இந்த வகுப்புகளுக்கு பாடவேளை குறைப்பு.. பள்ளிக் கல்வித்துறை உத்தரவு..!

இந்த வகுப்புகளுக்கு பாடவேளை குறைப்பு.. பள்ளிக் கல்வித்துறை உத்தரவு..!


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கான பாடவேளைகள் குறைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு கல்வியாண்டு துவங்கும் போதும் அந்த ஆண்டிற்கான பள்ளி நாட்காட்டி, விடுமுறை பட்டியல் மற்றும் புதிய பாட வேளைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில், தற்போது அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான புதிய கல்வியாண்டு பாடவேளைகள் குறித்த பட்டியலை ஒரு சில மாற்றங்களுடன் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாடவேளை குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, தற்போது வரை ஒரு வாரத்திற்கு 7 தமிழ் பாடவேளைகள் இருக்கும் நிலையில், இனி 6 ஆக குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, ஆங்கில பாடத்திற்கான ஒரு பாட வேளையும் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களுக்கு பதிலாக சமூக அறிவியல் பாடத்திற்கு ஒரு பாடவேளை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நீதி போதனைகளுக்காக ஒரு வகுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, கடந்த ஆண்டுகளில் ஆன்லைன் வகுப்புகளின்போது பள்ளி மாணவிகள் பலர் சந்தித்த பாலியல் சீண்டல்கள் சம்பவத்தை கவனத்தில் கொண்டு நீதி போதனைகளுக்கான வகுப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, இந்த கூடுதல் வகுப்புகளை பல்வேறு குழு செயல்பாடுகளுக்காக பயன்டுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தமிழ் பாடவேளையை குறைப்பது ஏற்புடையது அல்ல என்று தமிழ் ஆசிரியர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like