மீண்டும் 10 ரூபாய்க்கு குறைக்கப்பட்ட டிக்கெட் விலை..!! பயணிகள் உற்சாகம்..!!

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் வேற்றுருவாக்கம் அடைந்து, முதல் அலை, இரண்டாம் அலை என்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.இந்தியாவிலும் அதிவேகமாக பரவத் தொடங்கியதையடுத்து, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. பின்பு, படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
மக்கள், ரயில் நிலையங்களில் பயணிப்போர் அல்லாமல், வழியனுப்ப வருபவர்கள் என்று கூட்டம் குவிவதைத் தடுக்கும் பொருட்டு, அப்போது ரயில் நிலைய பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், பிளாட்பார்ம் கட்டணம் 10 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
சென்னை, மும்பை உள்ளிட்ட நாடு முழுவதும் மொத்தம் 250 முக்கிய ரயில் நிலையங்களில் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் இந்த கட்டண உயர்வு அமலில் இருந்தது.
இந்நிலையில், 50 ரூபாயாக உயர்த்தப்பட்டிருந்த நடைமேடை கட்டணம மீண்டும் 10 ரூபாயாக குறைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்றின் தாக்கம் வெகுவாக குறைந்து வருவதையடுத்து ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.