1. Home
  2. தமிழ்நாடு

ஜிப்லிபை செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள் - சாட்ஜிபிடி சி. இ. ஓ., வேண்டுகோள்..!

Q

சாட் ஜி. பி.டி.,யை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது.

சமீபத்தில் சாட்ஜிபிடி 'Ghiblify' (ஜிப்லிபை) என்ற புதிய போட்டோ பில்டர் அம்சத்தை இலவசமாக அறிமுகப்படுத்தியது. பயனாளர்கள் தங்கள் போட்டோக்களை சாட்ஜிபிடியில் பதிவேற்றி Ghiblify செய்து கேட்டால், அது அனிமேஷன் பாணியில் போட்டோக்களை மாற்றி தரும்.

ஏராளமான இணையவாசிகள் தங்கள் புகைப்படங்களை ஜிப்லிபை செய்யத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் இது உலகளாவிய ட்ரெண்டிங் ஆனது. தங்களது போட்டோக்களை ஜிப்லி செய்து அதை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினர்.

பல லட்சம் லைக்குகளை அள்ளி அங்கும் டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்தது. அந்த வகையில் அ.தி.மு.க., பொது செயலர் இ. பி. எஸ். ஜிப்லி டிரெண்டுக்கு மாறினார். அவரது சுவாரஸ்ய அரசியல் நிகழ்வுகளை ஜிப்லி செய்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.

ஒரு கட்டத்தில் சாட்ஜிபிடியின் மெயின் சர்வரே ஆட்டம் கண்டது. பலர் ஒரே நேரத்தில் இந்த பில்டரை பயன்படுத்தத் தொடங்கியதால் சாட்ஜிபிடியின் செயல் வேகம் குறைந்து போட்டோக்கள் சரியாக ஜெனரேட் ஆகாமல் நின்றது.

இது குறித்து, சாட்ஜிபிடியின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் வேதனை பதிவு ஒன்றை வெளியிட்டார். அவர் கூறியிருப்பதாவது: ஏராளமானோர் ஜிப்லிபை செய்து வருவதால் சாட்ஜிபிடி சர்வர்கள் ஓவர்லோட் ஆகி விட்டது. எங்கள் நிறுவன ஊழியர்களும் தூக்கமின்றி தவிக்கின்றனர். ஜிப்லிபை செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

Trending News

Latest News

You May Like