RED ALERT : தொட்டபெட்டாவுக்கு சுற்றுலா பயணிகள் செல்லத் தடை!
கேரளாவை தொடர்ந்து தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இதன்காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டாவுக்கு சுற்றுலாப்பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து அடுத்து தொட்டபெட்டா, பைன் பாரஸ்ட் நாளை (மே 25) மூடப்படுகிறது .சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை ஒருநாள் தொட்டபெட்டா மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.