இந்த மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் – வானிலை மையம் தகவல்!
இந்தியாவில் கோடை காலம் தொடங்கி இருக்கும் நிலையில் பல மாவட்டங்களில் கடுமையான வெப்பம் இருந்து வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் கடுமையான வெப்பம் இருப்பதால ரெட் அலர்ட் மற்றும் மும்பை மாநிலத்திற்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் கடும் வெப்பம் மற்றும் ஈரப்பததால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு அசவுகரியம் ஏற்படும்.
மேலும் கேரளாவில் கொளுத்தும் வெயில் காரணமாக பத்தினம் திட்டா, எர்ணாகுளம், கண்ணூர், ஆலப்புழா, கோட்டயம், மலப்புரம், கொல்லம், திருச்சூர், கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய 10 மாவட்டங்களுக்கு 25 ஆம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தொடர்ந்து வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் மக்கள் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.