இன்று 5 மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்'..!
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று (நவ.29) அதிகன மழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்
இன்று 'ஆரஞ்ச் அலெர்ட்'
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று, 21 செ.மீ.,க்கு மேல் அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது
ஆரஞ்ச் அலெர்ட்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலுார், தஞ்சாவூர் மாவட்டங்களில் இன்று, 12 செ.மீ.,க்கு மேல் மிக கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதால், 'ஆரஞ்ச் அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில், 11 செ.மீ., வரை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.