தமிழகத்திற்கு வரும் நவம்பர் 30ம் தேதி ரெட் அலெர்ட்..!
'பெங்கல்' புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே நவ.,30ம் தேதி காலை கரையை கடக்கும். இந்நிலையில், தமிழகத்திற்கு வரும் நவம்பர் 30ம் தேதி ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அன்று 20 செ.மீ., மேல் மழை பொழியும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 29, 30ம் தேதிகளில் தமிழக வட மாவட்டங்களில் மிக கனமழையும், கடலோர மாவட்டங்களில் அதிக கனமழையும் பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.