10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆள்தேர்வு.. விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்... நல்ல வாய்ப்பு !

தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் டிசம்பர் 13ஆம் தேதி எழுத்துத் தேர்வு மாவட்டவாரியாக நடக்கும். மொத்த எழுத்துத் தேர்வு 1.20 நிமிடங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதித் தேர்வு பின்னர் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்படுவார்கள்.
மொழிப்பாடம் தமிழ்ப் பாடமாக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்புக்கு மேல் படித்துள்ள தகுதியான விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் இணைக்கல்வித் தகுதிக்கான சான்றிதழ் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்விதம் பதிவேற்றம் செய்யத் தவறினால் உரிய கல்வித் தகுதியாக ஏற்றுக்கொள்ள இயலாது.
- சம்பள விகிதம் ரூ.18,200 - 52,900
- பொதுப்பிரிவு: 18-24 வயது
- மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் 18-26 வயது
- பட்டியலினத்தவர் 18-29 வயது
- மூன்றாம் பாலினத்தவர் 18-29 வயது
- ஆதரவற்ற விதவைப் பெண்கள் 18-35 வயது
- முன்னாள் ராணுவத்தினர் 18-45 வயது இருக்கவேண்டும்
விண்ணப்பம், விண்ணப்பக் கட்டணம், தேர்வு நாள், தேர்வுகள் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைக் கீழ்க்கண்ட தேர்வு வாரிய இணைப்பில் காணலாம்.
https://tnusrbonline.org/pdfs/CR_2020_Notification.pdf
newstm.in