குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்க ரெடியா ? ஓடிடி-யில் வெளியானது ராமின் 'பறந்து போ'..!
திரையரங்குகளில் ரிலீசான பிறகு குறிப்பிட்ட இடைவேளைக்கு பின் புதிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகின்றனர். ரசிகர்கள் ஆர்வமுடன் புதிய படங்களின் ஓடிடி ரிலீசுக்காக காத்திருந்தனர். அந்த வகையில் ராமின் பறந்து போ ஓடிடி ரிலீசுக்காக காத்திருப்பில் இருந்தனர் ரசிகர்கள்.
இந்நிலையில் கடந்த ஜுலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த 'பறந்து போ' ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஓடிடி ரிலீசாக இருக்கிறது. நாளை முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் 'பறந்து போ' படத்தினை பார்க்கலாம். தியேட்டர்களில் ரசிகர்களுடைய மனம் கவர்ந்த இப்படம், ஓடிடி தளத்திலும் அமோகமான வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் மாற்று சினிமா படங்களை இயக்கி வரவேற்பினை பெறும் இயக்கத்தில் முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு 'பேரன்பு' ரிலீசாகி இருந்தது. மோகன்லால் நடிப்பில் வெளியான இப்படத்தினை தொடர்ந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு பின்பாக அவரது இயக்கத்தில் பறந்து போ ரிலீசானது. வெளியீட்டுக்கு முன்பாகவே பலத்தரப்பில் இருந்து இப்படத்துக்கு பாராட்டுக்கள் கிடைத்தது. பிரீமியர் ஷோவில் படம் பார்ந்த திரையுலகினர் பலரும் 'பறந்து போ' படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்து இருந்தனர்.
இயக்குனர் ராம் தனது பாணியில் இருந்து முழுவதுமாக விலகி 'பறந்து போ' படத்தினை இயக்கியிருந்தார். ஜாலியான ரோடு ட்ரிப் படைப்பாக இப்படம் உருவாக்கி இருந்தது. வேலை பளுவால் மகனுடன் நேரம் செலவழிக்க முடியாமல் இருக்கு ஹீரோ, மகனை ஒரு பயணம் அழைத்து செல்கிறார். இந்த ரோடு ட்ரிப்பில் நடக்கும் அழகான தருணங்களை மையமாக வைத்து வெளியாகி ரசிகர்களின் மனங்களை கவர்ந்திருந்தது 'பறந்து போ'.
பீல்குட் படைப்பாக வெளியாகியிருந்த இப்படத்தில் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருந்தார். அவரின் மனைவியாக பிரபல மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி மற்றும் அஞ்சலி, இயக்குனர் பாலாஜி சக்திவேல், அஜு வர்க்கீஸ், மாஸ்டர் மீதுல் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர். பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்த 'பறந்து போ' வசூலிலும் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தது. அத்துடன் ஹவுஸ்புல் காட்சிகளாகவும் திரையரங்குகளில் ஓடியது.இந்நிலையில் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது 'பறந்து போ'.
Oru click'la Paranthu Ponga 🪁#ParanthuPo streaming now ▶️
— JioHotstar Tamil (@JioHotstartam) August 4, 2025
▶️ https://t.co/wHFFaPwJ6f#JioHotstar presents #ParanthuPo streaming now on JioHotstar#ParanthuPoNowStreaming #ParanthuPoOnJioHotstar #jiohotstartamil @actorshiva #GraceAntony @yoursanjali @AjuVarghesee @eka_dop… pic.twitter.com/buRYeQNucg
.png)