1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி பார்க்க ரெடியா..! கீழக்கரை மைதானத்தில் ஜல்லிக்கட்டுக்கு முன்பதிவு செய்ய அறிவுறுத்தல்..!

1

அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு மைதான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தன.கடந்த வாரம் பணிகள் நிறைவு பெற்று பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு விழாவுக்கு தயார் ஆனது.

இந்நிலையில், மதுரை கீழக்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை வரும் 24-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.அன்றைய தினம் அங்கு நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 12 மணி முதல் நாளை மறுநாள் பிற்பகல் 12 மணி வரை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://madurai.nic.in இணையதளம் மூலம் தங்களது பெயர்கள், காளைகள் குறித்த விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like