'ஓட்டு போட ரெடியா..! இன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் என 46 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர்.
இந்நிலையில் இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. அதற்காக போலீஸார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் பறக்கும் படையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் சந்தேகத்திற்கு இடமாக யாரேனும் இருந்தால் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிப்ரவரி 5ஆம் தேதி இன்று தேர்தல் நடைபெறும் நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகின்றது.