1. Home
  2. தமிழ்நாடு

ஓட்டு போட ரெடியா..! இன்று விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல்..!

1

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு கடந்த ஜுன் 10ஆம் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து, ஜுன் 14 - 21ஆம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.அதில் 64 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பின்னர், 24ஆம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனையும், 26ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெற கடைசி நாளும் அறிவிக்கப்பட்டது. மேலும், 35 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 29 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். 

இந்நிலையில் இன்று (ஜூலை10) வாக்குப்பதிவும், 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. வாக்குகள் எண்ணும் பணிகள் பனையபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 107 ஊராட்சிகளும், விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வார்டுகளில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 926 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 20 ஆயிரத்து 40 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 29 பேர் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் உள்ளனர்.இவர்கள் வாக்களிக்க வசதியாக 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் 662 வாக்குப்பதிவு இயந்திரமும் (BALLOT UNIT), 330 கட்டுப்பாட்டு கருவியும் (CONTROL UNIT), 357 வாக்கினை உறுதி செய்யும் கருவியான VVPAT என 

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வசதியாக 220 மத்திய துணை ரானுவப் படையினர் உள்பட 2 ஆயிரத்து 651 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும், பதட்டமான வாக்குச்சாவடிகளைக் கண்காணிக்க 53 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தல் பணியில் ஆயிரத்து 355 அலுவலர்கள் பயன்படுத்தப்படவுள்ளனர்.

 

Trending News

Latest News

You May Like