முதலீடு செய்ய ரெடியா ? உங்கள் கஷ்ட காலத்தில் கை கொடுக்கும் சேமிப்புத் திட்டங்கள்..!

நீங்கள் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா மற்றும் அடல் பென்ஷன் யோஜனா ஆகியவற்றில் முதலீடு செய்யலாம். உங்கள் வருவாயிலிருந்து சிறிய முதலீட்டைச் செய்வதன் மூலம், உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பெரிய உதவியை செய்யும்.குறைவான பிரிமீயம் மட்டுமே செலுத்தி அதிக பலன்களை பெறுவது இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சம் ஆகும்.
1. பிரதம மந்திரி ஜீவன் ஜோதி காப்பீட்டுத் திட்டம்
இது ஒரு டேர்ம் இன்சூரன்ஸ் திட்டமாகும், இது நீங்கள் இல்லாத நேரத்தில் உங்கள் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ், காப்பீடு செய்தவர் இறந்தால், அவரது குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த உதவியானது கடினமான காலங்களில் குடும்பத்தின் பல தேவைகளை நிறைவேற்றும்.ஒருவர் அரசின் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், அவர் ஆண்டுக்கு ரூ.436 செலுத்தி இந்த திட்டத்தை வாங்க வேண்டும்.18 முதல் 50 வயது வரை உள்ள எவரும் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை வாங்கலாம்.
2. பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா குறிப்பாக நிதி ரீதியாக நலிவடைந்த மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியத்தை செலுத்த முடியாத மக்களுக்கு பயனளிக்கும். 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சுரக்ஷா பீமா யோஜனா, விபத்து ஏற்பட்டால் ரூ.2 லட்சம் வரை காப்பீடு வழங்குகிறது. இத்திட்டத்திற்கு, ஆண்டு பிரீமியம் ரூ.20 மட்டுமே செலுத்த வேண்டும்.
ஏழை வகுப்பைச் சேர்ந்தவர்களும் எளிதில் செலுத்தக்கூடிய தொகை இதுவாகும். விபத்தின் போது காப்பீடு செய்யப்பட்ட நபர் இறந்தால், அவரது நாமினிக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். அதேசமயம் பாலிசிதாரர் ஊனமுற்றவராக இருந்தால், விதிகளின்படி அவருக்கு ரூ.1 லட்சம் உதவி கிடைக்கும். இத்திட்டத்தின் பயனை 18 வயது முதல் 70 வயது வரை பெறலாம்.
அடல் பென்ஷன் யோஜனா
உங்கள் முதுமைக்கான வழக்கமான வருமானத்தை நீங்கள் ஏற்பாடு செய்ய விரும்பினால், நீங்கள் அரசாங்கத்தின் அடல் பென்ஷன் யோஜனாவில் (APY) முதலீடு செய்யலாம். இந்திய அரசின் இத்திட்டத்தின் மூலம் மாதம் ரூ.5,000 வரை ஓய்வூதியம் பெறலாம். இருப்பினும், நீங்கள் எவ்வளவு ஓய்வூதியம் பெறுவீர்கள் என்பது உங்கள் முதலீட்டைப் பொறுத்தது. வரி செலுத்துபவராக இல்லாத மற்றும் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள எந்தவொரு இந்திய குடிமகனும் அரசாங்கத்தின் இந்தத் திட்டத்தில் பங்களிக்கலாம்.