1. Home
  2. தமிழ்நாடு

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி..!!

Q

2 மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும். இந்நிலையில் இன்று (அக் 01) வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வட்டி விகிதம் 5.5 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்தார். மேலும், அவர் கூறியதாவது: வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் நிதி முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால தொலைநோக்கு பார்வை அடிப்படையில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.5% ஆக மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அடுத்த ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா வரி தொடர்பான முடிவுகள் வளர்ச்சியை பாதிக்கும்.இவ்வாறு சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like