புதிய ரூபாய் நோட்களை வெளியிடும் RBI..!பழைய ரூ.50 நோட்டுகள் செல்லுபடியாகுமா?

ரிசர்வ வங்கியின் ஆளுநராக இருந்த சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், மல்ஹோத்ரா 2024 டிசம்பர் மாதத்தில் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் சமீபத்தில் நியமிக்கப்பட்ட கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவின் சமீபத்தில் நியமிக்கப்பட்ட கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவின் சிக்னேச்சருடன் கூடிய புதிய நோட்டுகளை வெளியிட உள்ளதாக அறிவித்திருக்கிறது. சஞ்சய் மல்ஹோத்ரா ரிசர்வ் பேங்க்கின் 26-வது கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரூ.50 ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்பு கொண்ட புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது. புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்றுள்ள நிலையில், அவரது கையொப்பத்துடன் புதிய ரூபாய் நோட்டுகள் வெளியாக உள்ளது.
புதிதாக அச்சிடப்பட்டுள்ள 50 ரூபாய் நோட்டுகளில் என்னென்ன மாற்றங்கள் வரவுள்ளன?:
பாதுகாப்பை மேம்படுத்தவும், கள்ள நோட்டுகளை தடுக்கவும் அறிமுகப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி நியூ சீரிஸ்-இன் கீழ் புதிய 50 ரூபாய் நோட்டுகள் ஏற்கனவே உள்ள வடிவமைப்பிலேயே தொடர்ந்து அச்சிடப்பட உள்ளது. நோட்டின் முன்பக்கத்தில் மகாத்மா காந்தியின் உருவப்படமும், பின்புறத்தில் கலாச்சார கருத்துகளும் பொறிக்கப்பட்டிருக்கும்.
தற்போது புதிதாக பதவியேற்றுள்ள கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவின் புதுப்பிக்கப்பட்ட சிக்னேச்சர் மட்டுமே ஒரே மாற்றம். வேறு எந்த வடிவமைப்பு மாற்றங்களும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அனைத்து பழைய 50 ரூபாய் நோட்டுகளும் இன்னும் செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. ஆளுநர் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் கூடிய புதிய நோட்டுகள் வெளியிடப்பட்ட பிறகும், முந்தைய ஆளுநர்களால் கையொப்பமிடப்பட்ட பழையவை பயன்பாட்டில் இருக்கும்.
ஏன் புதிய நோட்டுகள் வெளியிடப்படுகிறது?: ஒவ்வொரு முறையும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் கையொப்பதை மாற்றுவது ரிசர்வ் வங்கியின் பொதுவான நடைமுறையாகும். புதிய ஆளுநர் பதவியேற்கும் போது அவரின் கையொப்பமிட்ட புதிய நோட்டுகள் வெளியிடப்படும். அதே வேளையில் பழைய நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும். உதாரணமாக உர்ஜித் படேல் கையொப்பமிட்ட 50 ரூபாய் நோட்டுகள் முதன் முதலில் 2016-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன. அதேநேரம் Y.V. ரெட்டி போட்ட கையொப்பமிட்ட ரூபாய் நோட்டுகள் 2004.ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன. அதேபோல தான் தற்போது சஞ்சய் மல்ஹோத்ரா கையொப்பமிட்ட 50 ரூபாய் நோட்டுகளும் வெளியிடப்படவுள்ளன