ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் டிஸ்சார்ஜ்!
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ். சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்திருந்த அவர், சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி குடியிருப்பில் தங்கியிருந்தார். திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டு, அவருக்கு தேவையான சிகிச்சைகளை அளித்தனர்.
இது தொடர்பாக நேற்று காலை 10 மணிக்கு அப்போலோ மருத்துவமனை மருத்துவ சேவைகள் இயக்குநர் மருத்துவர் ஆர்.கே.வெங்கடாசலம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நெஞ்செரிச்சல் (அசிடிட்டி) காரணத்தால் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளார். மருத்துவக் குழுவினர் அவரை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் நலமுடன் உள்ளார். விரைவில் வீடு திரும்புவார்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று மதியம் வீடு திரும்பினார்.