1. Home
  2. தமிழ்நாடு

ரேமண்ட் தலைவர் கவுதம் சிங்கானியா அறிவிப்பால் பங்குச்சந்தையில் சரிவு..!

1

ரேமண்ட் குடும்பத்திலிருந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ரேமண்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கவுதம் சிங்கானியா வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், 

“கடந்த தீபாவளியைப் போல இந்த தீபாவளி இல்லை. 32 வருடங்கள் ஜோடியாக ஒன்றாக இருந்து, பெற்றோராக வளர்ந்து, உறுதி மற்றும் நம்பிக்கையுடன் பயணித்தோம். அண்மைக் காலமாக துரதிர்ஷ்டவசமானவை பல நடந்தேறின. அது தொடர்பான வதந்திகளும் எங்களைத் துரத்தின. நானும் நவாஸும் இங்கிருந்து வெவ்வேறு பாதைகளைத் தொடர்கிறோம்” என்று அதில் விவரித்திருந்தார்.

மண வாழ்வில் முறிவை அறிவித்திருக்கும் இந்த தம்பதிக்கு நிஹாரிகா மற்றும் நிசாவுக்கு என 2 பெண் வாரிசுகள் உண்டு.

கடந்த வாரம் தானேயில் தனது கணவரின் தீபாவளி விருந்தில் கலந்துகொள்ளச் சென்ற நவாஸ் மோடி, தான் தடுத்து நிறுத்தப்பட்டதாக பொங்கினார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, சிங்கானியா தனது தந்தை விஜய்பட்டுடன் ஏற்பட்ட பகை தொடர்பாக செய்திகளில் பரபரப்பாக இடம் பிடித்தார். அதன் பின்னர் தற்போது மனைவியுடனான பூசலால் மீண்டும் செய்திகளில் இடம் பிடித்திருக்கிறார்.

மனைவியைப் பிரிவதாக ரேமண்ட் தலைவர் அறிவித்ததை அடுத்து, பங்குச்சந்தையில் ரேமண்டின் பங்குகள்1.64 சதவீதம் வீழ்ச்சி கண்டது.

 

Trending News

Latest News

You May Like