116 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்த ராயன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..!
தனுஷின் 50-வது படமான ராயன் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. தனுஷ் இயக்கி நடித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தில் தனுஷுக்கு தம்பிகளாக காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷனும், தங்கையாக துஷாரா விஜயனும் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா இதில் வில்லனாக நடித்துள்ளார்.
படம் கடந்த ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ‘ராயன்’ படத்தின் திரைக்கதை அகாடமி மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நூலகத்துக்கு தேர்வாகியுள்ளது என தயாரிப்பு நிறுனவமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ‘ராயன்’ படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சரஸ் மக்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதனால் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். படம் அதன் இரண்டாம் வாரத்தில் வெற்றிகரமாக காலடி எடுத்து வைத்துள்ளது. மக்களின் ஆதரவு இன்னும் அதிகமாகதான் உள்ளது ராயன் திரைப்படத்திற்கு. ராயன் திரைப்படம்.இதுவரை 116 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Raayan creating Box Office records ! 💥#Raayan ranagalam everywhere 🔥#RaayanMegaBlockbuster in cinemas near you! @dhanushkraja @arrahman @iam_SJSuryah @selvaraghavan @kalidas700 @sundeepkishan @prakashraaj @officialdushara @Aparnabala2 @varusarath5 #Saravanan @omdop… pic.twitter.com/PQwuYFWC5e
— Sun Pictures (@sunpictures) August 4, 2024