ரவி மோகனின் கராத்தே பாபு! ஆர்.கே.நகர் எம்எல்ஏ.,வாக ரவி மோகன்..!

ரவி மோகன் நடிப்பில், பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு வெளியான அத்தனை படங்களும் பெரிய ஏமாற்றத்தை சந்தித்தன. குறிப்பாக, கடைசியாக வெளியான ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் புதுவிதமான கதையுடன் இருந்ததால், மண்ணை கவ்வியது. இந்த நிலையில், அவரது 34வது படம் குறித்த டைட்டில் டீசர் இன்று வெளியாகி உள்ளது.
'கராத்தே பாபு' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் அறிமுக வீடியோவில், தமிழக சட்டசபையில் ஆளும்கட்சி எம்எல்ஏ.,வாக ரவி மோகன் நடித்துள்ளார். அதிலும், ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ.,வாக நடித்திருக்கும் அவர், சண்முக பாபு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் முதல்வராக நாசரும், எதிர்க்கட்சி தலைவராக கே.எஸ்.ரவிக்குமாரும் நடித்துள்ளனர். இந்த அறிமுக வீடியோ டீசர் வைரலாகியுள்ளது.
இத்தனை ஆண்டுகளாக ரசிகர்களால் ‘ஜெயம் ரவி’ என அழைக்கப்பட்டவர், சமீபத்தில் தன்னை ‘ரவி மோகன்’ என அழைக்க வேண்டும் எனக்கூறினார். இதை சிம்பாளிக்காக இந்த படத்தின் டீசரிலும் “எனக்கு இன்னொரு பெயர் இருக்கு..” என்பது போல தெரிவித்திருக்கிறார்.