1. Home
  2. தமிழ்நாடு

எல்லோரையும் எக்ஸ்போஸ் பண்ணனும் ஆனால்...: வீடியோ வெளியிட்ட ரவி மோகன் தெரபிஸ்ட்..!

Q

ஐசரி கணேஷ் பல கோடி செலவு செய்து தன் மகள் ப்ரீத்தாவுக்கு பிரமாண்டமாக திருமணம் செய்து வைத்திருக்கிறார். ஆனால் அந்த திருமணம் பற்றி யாருமே கண்டுகொள்ளவில்லை. ப்ரீத்தா கணேஷின் திருமணத்திற்கு சேர்ந்து வந்த ரவி மோகன், அவரின் தெரபிஸ்ட் கெனிஷா பிரான்சிஸ் பற்றியே அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் ஆர்த்திக்கு ஆதரவாக பலர் கெனிஷாவை சமூக வலைதளங்களில் விளாசுகிறார்கள். ஆர்த்திக்கே அம்மா மாதிரி இருக்கிறார் கெனிஷா. அழகான மனைவி இருக்க இவரை போயா நீங்கள் காதலிக்கிறீர்கள் ரவி மோகன்?. ஆர்த்தியின் கண்ணீர் உங்களை சும்மாவிடாது கெனிஷா என சமூக வலைதளங்களில் விளாசுகிறார்கள்.

இந்நிலையில் தன்னை விமர்சிப்பவர்களுக்காக தொடர்ந்து இன்ஸ்டா ஸ்டோரியில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் கெனிஷா.

இந்நிலையில் எல்லோரையும் எக்ஸ்போஸ் செய்ய வேண்டும். ஆனால் நான் செய்ய மாட்டேன் என ஒரு வீடியோவை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார் கெனிஷா. மேலும் முகத்தில் குத்துவது சட்டவிரோதமானது என்பதால் தியானம் செய்வதாகவும் ஒரு வீடியோவை போஸ்ட் செய்திருக்கிறார்.

யாரை எக்ஸ்போஸ் பண்ண வேண்டும் என்கிறார், யாரை மூஞ்சியை சேர்த்து குத்த விரும்புகிறார் இந்த கெனிஷா என சினிமா ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பாடகி கெனிஷாவும் ஆர்த்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

Q

அதில், ”ஒரு ஆண் கலவரமான உணர்ச்சிகளை கொண்ட பெண்ணிடம் ஈர்க்கப்பட மாட்டார். அவருக்கு அமைதி கொடுக்கும் பெண்ணிடமே அவரது இதயம் செல்லும். அந்த பெண்ணின் கனிவு என்பது ஒரு பாவனையாக இருக்காது. அது ஒரு பெரிய சக்தியாக இருக்கும். அவள் அவனது வலிமையுடன் போட்டியிடவில்லை, அவள் அதை சமநிலைப்படுத்துகிறாள். அப்படி இருக்கையில் இருவரும் அவரவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள்’ என தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like