1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் புது பொலிவு பெறும் ரேஷன் கடைகள்- வெளியான சூப்பர் தகவல்!!

1

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 11 மண்டலங்களில் செயல்படும் 100 அமுதம் நியாய விலை அங்காடிகளை முன்னுரிமை அடிப்படையில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அங்காடி ஒன்றிற்கு ரூ.5 லட்சம் வீதம் செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை (வடக்கு), சென்னை (தெற்கு), திண்டுக்கல், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, சிவகங்கை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், பொது விநியோகத் திட்ட நுகர்வோருக்கு மேம்படுத்தப்பட்ட சேவைகள் வழங்குவதற்காக கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாய விலை கடைகள் பொலிவூட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.7 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரிசி ஆலைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும், தஞ்சாவூர் மண்டலம் அம்மாபேட்டை, திருவாரூர் மண்டலம் சுந்தரக்கோட்டை, மயிலாடுதுறை மண்டலத்தில் எருக்கூர்-II மற்றும் சித்தர்காடு, கடலூர் மண்டலத்தில் நெய்வேலி, சிவகங்கை மண்டலத்தில் மானாமதுரை நவீன அரிசி ஆலைகளில் அதி நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டு சுற்றுச்சூழல் மேம்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ரூ.22.30 கோடி மதிப்பீட்டில் சேமிப்பு கிடங்கு கட்டடங்கள் புனரமைப்பு செய்யப்படும். 9 சேமிப்புக் கிடங்கு வளாகங்களில் உள்ள 53 கிடங்கு கட்டடங்களின் மேற்கூரைகள், சுற்றுச்சுவர்கள், மின்சாரப் பணிகள், சாலைகள், சேமிப்புக் கிடங்கு அலுவலக கட்டடங்கள், சுமை தூக்குவோர் தங்கும் வசதிகள் போன்ற கட்டமைப்புகளுடன் புனரமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ரூ.29.5 கோடி மதிப்பீட்டில் புதிய வட்ட செயல்முறைக் கிடங்கு வளாகங்கள் சரி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் 2,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட வளாகம், ரூ.13.9 கோடி மதிப்பீட்டில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டத்தில் 6,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு வளாகம், ரூ.11.10 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வட்டத்தில் 5,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு வளாகம் நபார்டு நிதியுதவியுடன் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like