1. Home
  2. தமிழ்நாடு

ரேஷன் அரிசி கடத்தல்:புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு..!

1

தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமோலின் ஆயில் ஆகியன தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக கொள்முதல் செய்து 355 கிடங்குகளில் இருப்பில் வைத்து 36,578 நியாய விலை அங்காடிகளின் மூலம் 2,23,86,333 குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.சமீப நாட்களாக தமிழ்நாட்டில் அரிசி திருட்டு அதிகரித்துள்ளதாக புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன. கடந்த 2 மாதங்களாக அரிசி திருட்டு ரேஷன் கடைகளில் உச்சம் அடைந்துள்ளன. முக்கியமாக தமிழ்நாட்டில் இருந்து ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கேரளாவிற்கு அரிசி கடத்தும் பணிகள் அதிகம் நடந்து வருகின்றன. அங்கே அதிக விலைக்கு இந்த அரிசிகள் விற்கப்படுகிறது.சமீபத்தில் குற்றச்செயலில் ஈடுபட்ட 619 வாகனங்களும் நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி விற்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பாக முக்கியமான சில தகவல்களை வெளியிட்டு உள்ளது.

இனி ஜிபிஎஸ் உடன் கூடிய இ-வழித்தடம் அமைக்கப்படும். இந்த வழித்தடத்தில் மட்டும் வாகனங்கள் செல்ல வேண்டும். வாகனங்கள் கண்காணிப்பு, ஜிபிஎஸ் மூலம் செயல்படுத்தப்படும் லாக் உள்ளிட்ட வசதிகள் கொண்டு வரப்பட உள்ளன.கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொது மக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது, என்று கூறப்பட்டு உள்ளது.புகார் தெரிவிப்பவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படும். இதற்காக மாநில உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டு உள்ளது.

Trending News

Latest News

You May Like