1. Home
  2. தமிழ்நாடு

ரேஷன் அட்டைதாரர்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.! உங்களுக்காக இன்று சிறப்பு குறை தீர்ப்பு முகாம்..!

1

ரேஷன் அட்டை பயன்படுத்தும் மக்களுக்கு சில சமயங்களில் ரேஷன் அட்டைகளில் புதிய உறுப்பினர் பெயர் சேர்த்தல், உறுப்பினர் பெயரை நீக்குதல், மொபைல் நம்பர் அப்டேட், பயோ மெட்ரிக் அப்டேட் போன்ற திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் இருக்கும்.

இப்படி ரேஷன் அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியுள்ள பயனர்களின் வசதிக்காகத் தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு மாதமும் மண்டல வாரியாக சிறப்பு குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் ரேஷன் அட்டை வைத்திருக்கும் பயனாளிகள் தங்களுடைய அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், அப்டேட் செய்வது மட்டுமல்லாமல் ரேஷன் பொருட்கள், ரேஷன் கடை, ரேஷன் ஊழியர்கள் தொடர்பான புகார்களையும் பதிவு செய்ய முடியும்.


இந்நிலையில் இந்த மாதம் ரேஷன் அட்டை பயனாளிகளுக்கான குறை தீர்ப்பு முகாம் இன்று ஜூலை 13ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த குறை தீர்ப்பு முகாம் ஜூலை 13ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை மண்டல உதவி ஆணையர், வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறுகிறது.

ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று ரேஷன் பொருட்களை வாங்க முடியாத முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அரசு தரப்பிலிருந்து அங்கீகாரச் சான்று வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு குரை தீர்ப்பு முகாம்களில் முதியோர்களும், மாற்றுத் திறனாளிகளும் அங்கீகாரச் சான்றினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த குறை தீர்ப்பு முகாமில் கலந்து கொண்டு ரேஷன் அட்டை பயனாளிகள் தங்களுக்குத் தேவையான திருத்தங்களைச் செய்தும், குறைகளையும் தெரிவிக்கலாம். 
 

Trending News

Latest News

You May Like