1. Home
  2. தமிழ்நாடு

திருமலையில் 16-ம் தேதி ரத சப்தமி விழா..!

1

ரத சப்தமி மினி பிரமோற்சவம் வருகிற 16-ம் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது.இதற்காக திருமலைக்கு திரளான பக்தர்கள் வருவதற்கு தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது. 

ரத சப்தமி அன்று 7 வாகனங்களில் மலையப்பசாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். காலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனத்திலும், 9 மணி முதல் 10 மணி வரை சின்னசேஷ வாகனத்திலும், 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், மதியம் ஒரு மணி முதல் 2 மணி வரை  அனுமந்த வாகனத்திலும் மாட வீதிகளில் மலையப்பசாமி வலம் வந்து அருள் பாலிக்கிறார். 

தொடர்ந்து மதியம் 2 மணி முதல் 3 மணி வரை சக்கர ஸ்நானம், மாலை 4 முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனத்திலும், 6 மணி முதல் 7 வரை சர்வபூபால வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரை  சந்திரபிரபை வாகனத்திலும் உலாவருகிறார். 

ரதசப்தமி அன்று கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம் மற்றும் சஹஸ்ர தீப அலங்கார சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. அதே சமயம் சுப்ரபாதம், தோமாலா மற்றும் அர்ச்சனை தனிமையில் செய்யப்படுகின்றன. இவ்வாறு தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

Trending News

Latest News

You May Like