1. Home
  2. தமிழ்நாடு

ரத்தன் டாடா மறைவையொட்டி புதிய தலைவர் அறிவிப்பு..! யார் இந்த நோயல் டாடா?

Q

பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 86, உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம்( 9ம் தேதி) இரவு காலமானார். தற்போது, அவரது மறைவிற்குப் பிறகு, ரூ.30 லட்சம் கோடி மதிப்புள்ள டாடா குழுமத்தை நிர்வகிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில்,இன்று டாடா அறக்கட்டளை புதிய தலைவராக, நோயல் டாடா நியமனம் செய்யப்பட்டுள்ளார். நோயல் டாடா, ரத்தன் டாடாவின் சகோதரர்.

டாடா இன்டர்நேஷனல் லிமிடெட், வோல்டாஸ், டாடா இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் தலைவராகவும், டாடா ஸ்டீல் மற்றும் டைட்டன் நிறுவனங்களின் துணைத் தலைவராகவும் உள்ளார் நோயல் டாடா.

2010ம் முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாயை 500 மில்லியன் டாலரில் இருந்து 3 பில்லியன் டாலராக உயர்த்தினார். 11 ஆண்டுகளிலேயே மிகப்பெரிய லாபத்தை காட்டி அசத்தினார் நோயல் டாடா.

மறைந்த ரத்தன் டாடாவின் தந்தை நேவல் டாடா. அவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு ரத்தன் டாடா மற்றும் ஜிம்மி டாடா என 2 மகன்கள். முதல் மனைவியை 1940களில் விவாகரத்து செய்த நேவல் டாடா, இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

அந்த இரண்டாம் மனைவியின் மகன் தான், தற்போது டாடா அறக்கட்டளை தலைவராக பொறுப்பேற்றுள்ள நோயல் டாடா ஆவார்.

Trending News

Latest News

You May Like