1. Home
  2. தமிழ்நாடு

எலி மருந்து நிறுவன உரிமம் ரத்து..!

Q

சென்னை குன்றத்தூர் அருகே மணஞ்சேரி நகர் பகுதியை சேர்ந்தவர் கிரிதரன். இவர் தனது மனைவி பவித்ரா, மகள் வைஷாலினி, மகன் சாய் சுந்தரேசன் உடன் அப்பகுதியில் வசித்து வந்தார். கிரிதரன் அதே பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

வைஷாலினி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கிரிதரன் வீட்டில் எலித் தொல்லை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இணையதளத்தில் கிரிதரன் தேடி உள்ளார்.

அப்போது சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் யுனிக் பெஸ்ட் கண்ட்ரோல் என்ற நிறுவனத்தில் முகவரி கிடைத்திருக்கிறது. இதனையடுத்து அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்ட கிரிதரன், தனது வீட்டில் எலித் தில்லை அதிகமாக இருப்பதாக கூறியிருக்கிறார். இதனையடுத்து அங்கு வந்த நிறுவனத்தின் ஊழியர்கள் இரண்டு பேர் வீட்டில் ஆங்காங்கே எலி மருந்தை தெளித்துள்ளனர். மேலும் பல இடங்களில் எலி மருந்துகளை வைத்து சென்றுள்ளனர். எலி மருந்து அடித்த பிறகு வீட்டில் 4 மணி நேரம் ஜன்னல் கதவை திறந்து வைத்திருக்க வேண்டும் காற்றோட்டமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

ஆனால் அன்று இரவு அனைவரும் வீட்டில் ஏசியை ஆன் செய்துவிட்டு தூங்கி உள்ளனர். இந்நிலையில் நள்ளிரவில் திடீரென குழந்தை வைசாலிக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. காலையில் அனைவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்படவே நண்பர்கள் உதவியுடன் கோவூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்ததில் வைஷாலி மற்றும் சாய் சுந்தரேசன் உயரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் மயக்க நிலையில் இருந்த கிரிதரன் மற்றும் பவித்ராவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலிசார் நடத்திய விசாரணையில் எலிமருந்தை வீட்டில் வைத்ததும் நெடி பரவி ஏசி மூலமாக அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து அந்த நிறுவனம் மற்றும் ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

எலி மருந்து அடித்தபின் வீட்டில் இரண்டு மூன்று இடங்களில் வைக்க வேண்டிய எலி மருந்தை 12 இடங்களில் ஊழியர்கள் வைத்ததால் அதிகளவு நெடி பரவி பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதை அடுத்து மருந்து வைத்துச் சென்ற தினகரன், சங்கர் தாஸ் என்ற இரு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நிறுவனத்தின் உரிமையாளர் பிரேம்குமாரை தேடி வருகின்றனர்.

மேலும் தனியார் நிறுவனம் பயன்படுத்திய எலி மருந்து தன்மை குறித்து ஆய்வு செய்ய அங்கு போலீசார் சோதனை நடத்தினர். இதில் தமிழகத்தில் எலி பேஸ்ட் வைக்க தடை இருக்கும் நிலையில் அவர்கள் அது போன்ற மருந்துகளை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து யுனிக் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

Trending News

Latest News

You May Like