மகா சிவராத்திரி நாளில் ஏற்படும் அரிய நிகழ்வு..! அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் 3 ராசிகள்!

மகா சிவராத்திரியில் அரிய நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது. அதாவது 60 ஆண்டுகளுக்கு பிறகு அவிட்ட நட்சத்திரத்தில் மகா சிவராத்திரி ஏற்படுகிறது.
இந்த அரிய நிகழ்வுகளால் மூன்று ராசியினரின் வாழ்வால் அபிரிமிதமான அதிர்ஷ்டம் உருவாகிறது. அந்த ராசிகள் யார் என்பதையும் அவர்கள் பெறும் பலன்களையும் தெரிந்துகொள்ளலாம்.
மேஷம்: பொற்காலத்தின் தொடக்கமாக இருக்கும். நினைத்த காரியம் எல்லாம் நடைபெறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். செலவும் கட்டுக்குள் இருக்கும். இதனால் மேஷ ராசியினரின் பொருளாதாரம் அதிகரிக்கும். நீண்ட காலமாக ஆசைப்பட்ட வேலையும் கிடைக்கும். நல்ல பதவியையும், மதிப்பையும் பெறுவார்கள். பணியிடத்தில் அனைவராலும் பாராட்டப்படுவார்கள்.
மிதுனம்: பொருளாதார நிலை வலுவாகும். பணம் சார்ந்த வேலையில் வெற்றி தேடி வரும். காதல் உறவு இனிமையானதாக மாறும். திருமண உறவு சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழிலில் பொருளாதார பலன்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தும் பண வரவுக்கான வாய்ப்புள்ளது. பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு மன நிம்மதியை பெறுவார்கள்.
சிம்மம்: மகா சிவராத்திரி சிம்ம ராசியினரின் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டுவரும். தொழில் செய்வோர் சிறப்பான லாபத்தை பெறுவார்கள். அதாவது தொழில் செய்பவர்கள் செய்த முதலீட்டில் இருந்து இரட்டிப்பு லாபத்தை பெறுவார்கள். நீண்ட நாள்களாக இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் பணம் வந்து சேரும்.