1. Home
  2. தமிழ்நாடு

பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரேபிடோ டிரைவர்..!

Q

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரேபிடோ பைக் டாக்சி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 5-ம் தேதி இரவு சாலையில் நடந்து சென்ற 26 வயது பெண்ணிடம் ரேபிடோ பைக் டாக்சி டிரைவர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். தப்பியோடிய அந்த நபரை, போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் ரேபிடோ நிறுவனத்தின் உதவியுடன் தேடி வந்தனர்.
விசாரணையில் சம்பவத்தன்று ரேபிடோ பைக் டாக்சி ஓட்டியவர் வெட்டுவாங்கேணி கற்பக விநாயகர் நகரைச் சேர்ந்த திருமலை என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற திருமலைக்கு தவறி விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 

Trending News

Latest News

You May Like