1. Home
  2. தமிழ்நாடு

ராபிட் செஸ் போட்டி; இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன்!

Q

அமெரிக்காவில், உலக மகளிர் ராபிட் செஸ் போட்டி நடைபெற்றது. இதில் இந்தோனேஷியா வீராங்கனை ஐரீன் சுகந்தரை எதிர்கொண்டு களம் இறங்கிய, இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி, 11 புள்ளிகளில் 8.5 புள்ளிகளுடன் போட்டியை முடித்தார். இதனால், இந்தோனேஷியா வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் பெற்றார்.
சாம்பியன் பட்டம் வென்ற, கொனேரு ஹம்பியை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். சர்வதேச அளவில் செஸ் போட்டியில் சாதனை படைத்த ஜூடித் போல்கர், சூசன் போல்கர், விஸ்வநாதன் ஆனந்த், குகேஷ் மற்றும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் தான் கொனேரு ஹம்பி. இவருக்கு வயது 37.

Trending News

Latest News

You May Like