போஸீஸ் பூத்தில் வைத்து இளம்பெண் கற்பழிப்பு!

போலீஸ் பூத்தில் வைத்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் வீடியோ மூலம் சிக்கினார்.
குஜராத் மாநிலம் மோர்பியில் பாழடைந்த போலீஸ் பூத் ஒன்று உள்ளது. அந்த போலீஸ் பூத்தில் இருந்து திடீரென பெண் ஒருவர் அலறும் சத்தம் கேட்டதால், அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஹரேஷ் ஜாதவ் என்ற இளைஞர் போலீஸ் பூத் பக்கம் சென்றார்.
அவர்கள் போலீஸ் பூத்துக்குள் எட்டிப்பார்த்த போது பெண் ஒருவரை அதே பகுதியை சேர்ந்த மஹேந்திர ரதோட் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கொண்டிருந்தார்.
அதை பார்த்த ஹரேஷ் தன்னுடைய செல்போனை எடுத்து அந்த காட்சியை படமாக்கினார். பிறகு அந்த வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டார்.
அந்த காட்சி தீயாக பரவியதை அடுத்து அனைவரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். காவல்துறையினரும் அந்த வீடியோவை பார்த்தனர். அவர்கள் முதலில் வெளியிட்ட நபரை கண்டறிந்தனர்.
பின்னர் வீடியோவில் இருந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்தப் பெண் கணவனை பிரிந்து அதே பகுதியில் பிச்சையெடுத்து வாழ்பவர் என்றும் கண்டறிந்த போலீசார் இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in