ரங்கராஜன் நரசிம்மன் விடுதலை..!
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். கோவில்கள் தொடர்பாக நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடர்ந்து நடத்தி வருகிறார். கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பாக, துணை முதல்வர் உதயநிதி வீட்டுக்கு ஜீயர்கள் மூவர் சென்றதாகவும், அங்கு தோஷ நிவர்த்தி செய்ததாகவும் பரபரப்பு ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அவரும், ஜீயரும் பேசிக் கொள்வது போல இருந்த அந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தன் மீது அவதூறு பரப்பியதாக ஸ்ரீபெரும்புதூர் ஜீயர், ரங்கராஜன் நரசிம்மன் மீது போலீசில் புகார் அளித்தார்.இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை கைது செய்தனர். அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.மொத்தம் பதிவான ஏழு வழக்குகளிலும் அவர் ஜாமின் பெற்ற நிலையில் இன்று காலை சென்னை மத்திய சிறையில் இருந்து விடுதலை ஆனார்.