1. Home
  2. தமிழ்நாடு

கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக முதல்முறை கவுன்சிலரான ரங்கநாயகி தேர்வு..!

1

கோவை மாநகராட்சி மேயராக கல்பனா ஆனந்தகுமார் பதவி வகித்து வந்தார். இவர் உடல்நலம் மற்றும் சொந்த காரணங்களுக்கு மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் கல்பனாவின் ராஜினாமாவை அடுத்து கோவை மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த தமிழக மாநில தேர்தல் ஆணையம் கடந்த ஜூலை 25ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி கோவை மேயர் பதவிக்கு நாளை ஆகஸ்ட் 6ஆம் தேதி, அதாவது நாளைக்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

கோவை மேயர் பதவிக்கு பெண் கவுன்சிலர்கள் இடையே போட்டா போட்டி நிலவியதாக சொல்லப்பட்டது. 27வது வார்டு கவுன்சிலர் அம்பிகா, 29ஆவது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி, 34 ஆவது வார்டு கவுன்சிலர் மாலதி, 36ஆவது வார்டு கவுன்சிலர் தெய்வானை, 46ஆவது வார்டு கவுன்சிலர் மீனா லோகு, 63ஆவது வார்டு கவுன்சிலர் சாந்தி ஆகியோரிடையே போட்டி இருந்தது.

இந்த நிலையில் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நாளை காலை 10.30 மணிக்கு மேயர் பதவிக்கு வார்டு உறுப்பினர்களில் இருந்து ஒருவரை தேர்வு செய்யும் மறைமுக தேர்தல் கூட்டம் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக, முதல்முறை கவுன்சிலரான 29வது வார்டு உறுப்பினர் ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திமுக அறிவித்துள்ளது. புதிய மேயரை தேர்வு செய்வது தொடர்பாக கோவையில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்த கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது .

Trending News

Latest News

You May Like