1. Home
  2. தமிழ்நாடு

வேட்டையன் படத்தில் ராணா கதாபாத்திரத்தின் பெயர் அறிவிப்பு..!

Q

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரஜினி, ராணா, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாக உள்ளது. அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இப்படம், அக்டோபர் 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்பேட்டை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ராணா கதாபாத்திரம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி, திருநெல்வேலி, மும்பை, சென்னை என பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றதைத் தொடர்ந்து, தற்போது டப்பிங் பணி நடந்து வருகிறது. இசை வெளியீட்டு விழா வருகிற 20ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த இசைவெளியீட்டு விழாவில் ரஜினி என்ன பேச போகிறார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.


 


 

Trending News

Latest News

You May Like