தெரிந்தது பிறை... நாளை ரமலான் பண்டிகை - தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவிப்பு!

தமிழக அரசின் தலைமை ஹாஜி வெளியிட்ட அறிவிப்பில், நாளை (மார்ச் 31, 2025) தமிழக முழுவதும் ரமலான் (ஈதுல் ஃபித்ர்) பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு, கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கியது. அதன்பின் கடந்த ஒரு மாதமாக இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வந்தனர். இந்நிலையில், இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படையில், ஷவ்வால் மாதம் இன்று தொடங்கியதைத் தொடர்ந்து, ரமலான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அரேபிய நாடுகளில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இஸ்லாமியப் பெருமக்கள் சிறப்பு தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்று பிறை தென்பட்டதால் நாளை ரம்ஜான் கொண்டாடப்படுகிறது.