1. Home
  2. தமிழ்நாடு

கோவையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை..!

Q

இஸ்லாமியர்களின் புனித மாதமான புனித ரம்ஜான் மாதத்தில் முப்பது நாட்கள் நோன்பு இருந்து பிறகு ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
 
அந்த வகையில் இந்த ஆண்டு ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையினை கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹால் திடலில் இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான ஜாக் அமைப்பின் சார்பில் இன்று ரமலான் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
 
இந்த சிறப்பு தொழுகைகள் சுமார் 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடி சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இஸ்லாமிய மக்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் ரம்ஜான் 
வாழ்த்துக்களை தெரிவித்து கட்டித்தழுவி கொண்டனர்.
இஸ்லாமியர்களில் பெரும்பான்மை பிரிவான சுன்னத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை நாளை கொண்டாடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like