அடைத்து வைத்தாலும் அடங்காத ரம்யா பாண்டியன்! க்யூட் போட்டோ ஷூட்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ள ரம்யா பாண்டியன் உள்ளே இருந்தும் க்யூட்டான போட்டோக்கள் எடுத்து பதிவேற்றியுள்ளார்.
வரும் 4ஆம் தேதி தொடங்க உள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் மொட்டை மாடி புகழ் ரம்யா பாண்டியன் கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது. அதற்காக தற்போது போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அங்கு இருக்கும் ரம்யா பாண்டியன் உள்ளே இருந்தும் போட்டோக்களை பதிவேற்றி வருகிறார். வெளியே இருக்கும் போது ரசிகர்களின் கவனத்தை கவர அவர் அடிக்கடி புகைப்படங்கள் பதிவேற்றுவது வழக்கம். அதன் மூலம் சினிமா வாய்ப்பையும் பெற்றார்.
2D எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஒரு படத்திலும், திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஒரு படத்தில் ரம்யா பாண்டியன் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் தற்போது ரம்யா பாண்டியன் க்யூட்டான புகைப்படங்களை தற்போது பதிவேற்றியுள்ளார்.
newstm.in