1. Home
  2. தமிழ்நாடு

திருச்சி – ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்..!

1

திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் பகுதி தூரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மானாமதுரை- ராமநாதபுரம் பிரிவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திருச்சி ராமேஸ்வரம், ராமேஸ்வரம்-திருச்சி விரைவு ரயில்களானது (16849, 16850) ஜூலை 1 முதல் 31-ம் தேதி வரை (வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர) மானாமதுரை - ராமநாதபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயில்களானது பாம்பன் பால பராமரிப்புப் பணி காரணமாக ஏற்கனவே ராமநாதபுரம் ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like