1. Home
  2. தமிழ்நாடு

இனி ராமேஸ்வரம் கோவிலில் பரிகார பூஜைகள் செய்ய கட்டண வசூலிக்கப்படாது..!

Q

ராமநாதசாமி கோயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ராமநாதசாமி திருக்கோயில் மூலம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பக்தர்கள் வேண்டுகோளின் படியும், பக்தர்களின் வசதிக்காகவும் முன்னோர்களுக்கு பரிகார பூஜை செய்ய கட்டண சீட்டுகள் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சேபனை இருந்தால் பொது மக்கள் வரும் 20ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தில தர்பணத்திற்கு 200 ரூபாயும், பிண்ட பூஜைக்கு 400 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்ய கட்டணச் சீட்டுகள் குறித்த அறிவிப்பு திரும்பப் பெறப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் முன்ணேர்களுக்கு பரிகார பூஜைகள் செய்ய கட்டணச் சீட்டுகள் குறித்த அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் மூலம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பக்தர்களின் வேண்டுகோளின் படியும். பக்தர்களின் வசதிக்காகவும் முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்திட கட்டண சீட்டுகள் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும். இது குறித்து ஆட்சேபனை ஏதும் இருப்பின் பொதுமக்கள் தங்களது ஆட்சேபனையினை வருகின்ற 20.03.2024 -க்குள் தெரிவிக்கும்படி நாளிதழ்களில் 28.02.2024 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. நிர்வாகக் காரணங்களுக்காக இந்த அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது என ஆணையர்/செயல் தெரிவித்துள்ளார். 

Q

Trending News

Latest News

You May Like