விரைவில் ராமேஸ்வரம் - இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து..!
தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத் தலைவர் வள்ளலார் பேசுகையில், “ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தனியாகவும் தனுஷ்கோடி, அக்னி தீர்த்தம், பாம்பன் குந்துகால், தங்கச்சிமடம் வில்லுாண்டி தீர்த்தம், மன்னார் வளைகுடா முள்ளிமனை தீவு உள்ளிட்ட பகுதிகளை இணைத்து சுற்றுலா பயணிகளுக்கு திருச்செந்துார் முதல் தனுஷ்கோடி வரை உள்ளூர் கப்பல் போக்குவரத்தும் துவக்கப்பட உள்ளது.
“இதனால் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் பெரிதும் பயனடைவார்கள். சுற்றுலா மற்றும் இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து துவக்குவதற்கான இடங்களை ஆய்வு செய்துள்ளோம்.
“மத்திய அரசின் சுற்றுச்சூழல்துறை அனுமதி கிடைத்ததும் பயணிகள் கப்பல் நிறுத்துவதற்கான பாலம் கட்டும் பணி துவங்கும்,” என்றார்.