1. Home
  2. தமிழ்நாடு

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு தமிழர்கள் தான் காரணம் : மத்திய அமைச்சரின் பேச்சால் சர்ச்சை!

W

பெங்களூரு ப்ரூக்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த 1-ம் தேதி அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின. இதில் 10 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து, பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஆகிய அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் தமிழ்நாட்டிலிருந்து வருபவர்கள், குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபடுவதாக மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்தலாஜேவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களால்தான் நடைபெற்றது. டெல்லியிலிருந்து வருபவர்கள் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷமிடுகின்றனர். கேரளாவிலிருந்து வருபவர்கள் இங்குள்ள மக்கள் மீது ஆசிட் வீசுகின்றனர்" என்று குற்றம் சாட்டினார். ஷோபா கரந்தலாஜேவின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் பாஜகவின் ஷோபா கரந்தலாஜே முன்வைத்துள்ள இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மொழி, இனம், மதம் ரீதியாக பேசி மக்களவைத் தேர்தலில் மக்களை தூண்டிவிட்டு வாக்குகளை பெறுவதற்கான பாஜகவின் யுக்தி தான் இது என்று காங்கிரஸ் கட்சியினர், பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் மீது விமர்சித்து வருகின்றனர்

Trending News

Latest News

You May Like