21 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது : 31-ம் தேதி வரை சிறைகாவலில் வைக்க உத்தரவு..!!
ராமேஸ்வரம் கடலோரப் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலையில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்றுக் கொண்டு மீன்பிடி உபகரணங்களை சேகரித்துக் கொண்டு மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
இவர்கள் இந்திய இலங்கை கடலோரப் பகுதியான கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்துள்ளனர். இந்த கடலோரப்பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்களை பார்த்து எச்சரித்து உள்ளனர்.
இந்த பகுதியில் மீன் பிடிக்க வரக்கூடாது என விரட்டி உள்ளனர். இதனை அடுத்து திடீரென பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சிமடம் பகுதி சேர்ந்த இரண்டு படகுகளை சிறை பிடித்தனர். பின்னர் படகை சோதனையிட்டு படகில் இருந்த ஆரோக்கிய சுகந்தன், அருள்டிப்சன், சாமுவேல், அந்தோணி, சுப்பிரமணி, பூமிநாதன், ராஜ், சுந்தரபாண்டி, சீனிப்பாண்டி, பாலுச்சாமி, ராயப்பு லியோனார்ட், சக்திவேல், அந்தோணி லோபர்ஸ் அடிமை, குருஸ் திவாகர், அஜித்குமார், பிரவீன்ரெஜிஸ், செந்தில், இருளாண்டி ஆகிய 21 மீனவர்களையும் கைது செய்தனர்.
தொடர்ந்து 21 மீனவர்களையும் இரண்டு படகையும் இலங்கையை யாழ்ப்பாணம் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். அதன் பின்னர் 21 மீனவர்களையும் இலஙகை கடல் வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அங்கு அதிகாரிகள் 21 மீனவர்களிடம் விசாரணை செய்து எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக வழக்கு பதிந்து இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள். அங்கு நீதிபதி மீனவர்களை விசாரணை செய்து வரும் 31-ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் 21 மீனவர்களையும் போலீசார்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அடைத்தனர்.