இனி எந்த கட்சி நிகழ்ச்சிகளாக இருந்தாலும் நிர்வாகிகள் கார்களில் வந்து பங்கேற்கக் கூடாது - ராமதாஸ்..!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள் கவனத்திற்கு என்ற தலைப்பிட்டு ராமதாஸ் பதிவு ஒன்றை தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
அந்த பதிவில் கூறி உள்ளதாவது; பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்படும் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அதில் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கார்களில் வந்து பங்கேற்கக் கூடாது. நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் பெண்கள் உள்ளிட்ட பா.ம.க.,வினரை பஸ்கள், வேன்களில் அழைத்துக் கொண்டு அவர்களுடன் ஒன்றாக பயணித்து வரவேண்டும். இனி வரும் காலங்களில் இந்த அறிவுறுத்தலை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.