1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் ரமலான் நோன்பு துவக்கம்…!

1

இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படுவது நோன்பு மாதமான ரமலான் மாதம் தான். இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் இந்த மாதத்தில் தான் அருளப்பட்டது என்பதால், இஸ்லாமியர்கள் இந்த மாதத்தை புனித மாதமாக கருதி, மாதம் முழுக்க நோன்பினை கடைபிடிக்கிறார்கள்.

இஸ்லாமிய வழக்கத்தின் படி சந்திரனின் பிறை பார்க்கப்பட்டு மாதம் கணக்கிடப்படுகிறது. அதன்படி மாத்ததின் முடிவில் பிறை தென்பட்டால் ஒரு மாதத்தில் 29 நாட்கள் நோன்பு வைப்பார்கள்.பிறை தென்படவில்லை என்றால் 1 நாளை சேர்த்து 30 நோன்பு வைத்து கடைப்பிடப்பார்கள் .

இந்நிலையில் 8வது மாதமான  ஷஃபான் மாதம் நேற்றுடன் நிறைவு பெறுகிறது. இதனை தொடர்ந்து ரமலானுக்காக நேற்று தமிழ்நாடு முழுவதும் பிறை பார்க்கப்பட்டது. ஆனால் பிறை தென்படாததால் ஷஃபான் மாதத்தை 30 நாளாக் பூர்த்தி செய்வதாக தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி சுல்தான் சலாஹுதீன் அய்யூப் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ரமலான் பிறை நேற்று தென்படவில்லை. எனவே ரமலான் நோன்பு இன்று (மார்ச் 2 ) ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாகுத்தீன் அய்யூப் அறிவித்துள்ளார்.

அந்த அறிவிப்பில், “ஹிஜ்ரி 1446 ஷாபான் மாதம் 29ம் தேதி வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 28-02-2025 தேதி அன்று மாலை ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 02-03-2025 தேதி அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.ஆகையால் ஷபே கத்ர் 27-03-2025 வியாழக்கிழமை 28-03-2025 வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாட்களின் மத்தியிலுள்ள இரவில் ஆகும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிக்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரித்து வழங்குவதற்காக அத்தனை பள்ளிவாசல்களுக்கும் பச்சரிசி, தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்கள் அரசுக்கு கோரிக்கைகள் வைத்தனர்.

இந்த ஆண்டு (2025) ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிக்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாள்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 7,920 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 18 கோடியே 41 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like