ஜன.22-ல் அயோத்தி ராமர் கோவில் திறப்பு ..!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக ஸ்ரீராமர் கோயில் தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, அதை உ.பி. அரசு மேற்பார்வையிடுகிறது. ராமர் கோயிலுக்கு கடந்த 2020 ஆகஸ்டில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமானப் பணிகளை இன்னும் 3 மாதங்களில் முடித்து அடுத்த வருடம் ஜனவரியில் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளது.
இந்நிலையில் கோயில் திறப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளது. முன்னதாக 2024 ஜனவரியில் 20 முதல் 24ஆம் தேதிக்கு இடையில் விழாநடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியுடனும் கலந்து பேசி இதில் முடிவு எடுக்கவும், கோயிலை திறந்து வைக்க வருமாறு பிரதமர் மோடியை அழைக்க உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் டெல்லிக்கு சென்று வந்தார்.
அயோத்தியில் இந்து மதக்கடவுள் ராமர் கோவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்பட உள்ளது. திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகிகள் பிரதமர் மோடியை சந்தித்து வழங்கினர். அழைப்பிதழை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி திறப்பு விழாவில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளார்.
ராமர் கோயில் கட்டப்படுவதை முன்னிட்டு, அயோத்தி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 263 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மொத்த மதிப்பு ரூ.30,923 கோடி ஆகும்.